மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை தேவபுரம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு கிரியைகள் இன்று (02) காலை விநாயக ஹோமத்தோடு பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக வசந்தநாதக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
நாளைய தினம் (03) காலை 7.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 04.09.2025 வியாழக்கிழமை மகா கும்பாவிஷேகம் இடம்பெறவுள்ளது அதனைத்தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெற்று 27.09.2025 அன்று சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.