பிரதமரின் பணிப்புரைக்கமைய பின் தங்கிய பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டபணிகளை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கள விஜயம்.






பின் தங்கிய பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி  திட்டபணிகளை பார்வையிட மட்டக்களப்பு    பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  நேற்று நண்பகல் கள விஜயம்  ஒன்றினை கொக்கட்டிச்சோலை ராமகிருஷ்ண மிஷன்  வித்தியாலயத்திற்கு மேற்கொண்டு இருந்தார்

புதிய அரசாங்கத்தினால் கல்வி செயற் பாடுகளுக்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவை பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு உரிய முறையில் சென்றடைந்து உள்ளதா என்பதையும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளைப் பார்வையிடவும் பாராளுமன்ற உறுப்பினர்   விஜயம் மேற்கொண்டு இருந்தார்

பாடசாலை கல்வி சமூகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலையின் தற்போதைய வளப்பற்றாக்குறை சம்பந்தமாக ஆராய்ந்ததுடன் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் பற்றியும் முக்கிய குறைபாடுகள் பற்றியும் பாடசாலை யின் கல்வி அபிவிருத்தி சபை உறுப்பினர்களிடம் கேட்டறிந்து கொண்டார்

 பாராளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின் போது கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் இவ்விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.

 வரதன்