சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம்.
இலங்கையில் உள்ள சீன தூதரகத்தினால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இளம் தலைவர்களுக்கான செயலமர்வில் பங்கு பெற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று சீனா பயணமாகின்றார்..
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முதுநபீன் முஷாரப் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே சீனா பயணமானார்.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கட்சியின் தேசிய தலைவர் சட்ட முதுமானி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எல் .ஏ. எம் .ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளர் றஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் சட்டத்தரணி ஹபீப் றி பான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.