கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எமது மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஓர் இணை சங்கமாகவே செயற்பட்டு வந்தது. இச்சூழ்நிலையானது எமது மாவட்டத்தில் பூப்பந்தாட்ட வளர்ச்சியில் பெரும் தாக்கத்தினை செலுத்துவதாக அமைந்தது. ஏந்த தீர்மானங்கள் மேற்க்கொள்வதாக இருந்தாலும் எங்களினால் சுயமாக மேற்க்கொள்ள முடியாத நிலைமை இருந்ததுடன். மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கான பயிற்ச்சிகள், சுற்றுப்போட்டிகள் போன்றவற்றை சுயமாக எமது சங்கத்தினால் மேற்க்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. ஆத்துடன் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தினால் கிடைக்கின்ற உதவிகள் எமக்கு முறையாக கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைவதென தீர்மானித்து விதிகளுக்கு அமைவாக விண்ணப்பித்திருந்தது. இன்நிலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. J.J.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ.பேராசிரியர்.ஜயந்தலால் ரத்னசேகர இருவரும் தங்களது புரணமான அங்கிகாரத்தினை வழங்கியதுடன் எமது முயற்சி வெற்றியடைய உறுதுணையாக இருந்தானர். இம்முயற்ச்சியானது இன்று இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்தின் தலைவர் தேசவந்து ரொசான் குணவர்த்தன மற்றும் பொது செயலாளர் திரு.அஜீத் விஜேயசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் எமது மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கத்திற்கான பதிவானது 08.09.2025 மாவட்ட வழங்கிவைக்கப்படுகின்றது.
அன்று
இனிவரும் காலங்களில் எமது சங்கமானது நேரடியாக இலங்கை பூப்பந்தாட்ட நிறுவனத்துடன் இணைந்து செயற்படும்.
.jpeg)


.jpeg)




