சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை.

 


சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம் டிசம்பரில் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 10 ஆம் திகதி முதல் டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.