மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்
தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு
முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக இன்றைய
தினம் சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவ மாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்
போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை
பார்க்காதே ! உரிமைக்காக குரல் கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும்
பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன் , பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல்
தரையை வழங்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இ. சிறிநாத், இ.
சாணக்கியன் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.