ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ன் பாடசாலை கட்டாய வருகை தருதல் வசதி படுத்தல் குழுவின் ஏற்பாட்டில் தரம் 7 மாணவர்களில் வரவு குறைவான மற்றும் கற்றல் இடர்பாடுகளை எதிர் நோக்கும் மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
தரம் 7 ன் பகுதித் தலைவர் ஆசிரியர் எம்.எல்.நஜீம் தலைமையில், பாடசாலை வருகை தருதல் வசதி படைத்தல் குழுவின் பொறுப்பாளர் உப அதிபர் ஏ.ஜீ. அஸீஸுல் ரஹீம் நெறிப்படுத்தலில் நடைபெற்றது
இந்நிகழ்விற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார அவர்களும் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களின் சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.தாஷிம், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜே.எப். பர்ஸானா , உளவளத் துணை உத்தியோகத்தர் கே.எம். பவாஸ் ஆகியோருடன் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை )ன் பிரதி அதிபர்களான வி. அஸ்மீர், திருமதி எம்.எப்.சியானா, தரம் 7 வகுப்புகளுக்கு பொறுப்பான வகுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார அவர்கள் உரையாற்றும் போது பாடசாலைக்கு தொடர்ச்சியாக பிள்ளைகளை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக அரசாங்கத்தினால் விஷேடமாக செயற்படுத்தப் படும் சரோஜா வேலைத்திட்டத்தினூடா இருக்கமான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று குறிப்பிட்டமை கவனிக்கத் தக்கது.
ந.குகதர்சன்


.jpeg)
.jpeg)







