தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
நாடு முழுவதும் பரீட்சைக்கு ஒதுக்கப்பட்ட 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.