காரைதீவுக் கோட்டத்தில் 41 மாணவர்கள் சித்தி.

 




கல்முனை வலயத்தில் உள்ள காரைதீவுக்கோட்டத்தில்,  இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சை முடிவுகளின்படி 41 மாணவர்கள் சித்தி பெற்றிருப்பதாக காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளரும் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன்  தெரிவித்தார் .

இகிமி. பெண்கள் பாடசாலை-11, இகிமிஷன் ஆண்கள் பாடசாலை -09,  மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகா மகா வித்யாலயத்தில் தலா 07,  விஷ்ணு வித்யாலயம் மற்றும் கண்ணகி இந்து வித்யாலயம் தலா03,  மாளிகைக்காடு சபீனா வித்யாலயம் -01 என 41 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

இம்முறை விக்னேஷ்வரா  வித்யாலயம் மற்றும் அல் ஹுசைன் வித்யாலயத்தில் எந்த மாணவரும் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இம்முறை  41 மாணவர்கள் சித்தி அடைந்திருக்கிறார்கள். கடந்த வருடம் 35 மாணவர்கள் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 ( வி.ரி.சகாதேவராஜா)