தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பின் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

 




ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) மட்டக்களப்பின் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த முதல்நாளை நினைவுகூரும் வகையில் மாணவர்கள் சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.