சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் 25,000 ரூபாய் அபராதம் .

 


சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். 
 
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மருந்தகம் வைத்திருந்த குற்றச்சாட்டில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை குறித்த நபரை கைது செய்து இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. 
 
ராஜகிரிய பகுதியில் உள்ள மொரகஸ்முல்லவில் வசிக்கு ஒருவர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்தகம் நடத்துவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.