இலங்கை மன்றக்கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்ற குவியம் விருதுகள் 2025 விழாவில், நடிகை றுத்றா அமிர்தரெத்தினம் அவர்கள் சிறந்த நடிகை விருதினை வென்றார். அவரது “கைம்பெண்ணவள்” திரைப்படத்தில் வெளிப்படுத்திய வலிமையான மற்றும் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, விமர்சகர்களாலும் பார்வையாளர்களாலும் பாராட்டப்பட்டு, இந்த உயரிய விருதை பெற்றுத் தந்தது.
றுத்றா அமிர்தரெத்தினம் அவர்கள், திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல், பல்துறை ஆற்றல்களைக் கொண்டவர். இலங்கையின் ஒரே இளம் பெண் ஹரிகதா பிரசங்கக் கலைஞர் என்ற தனித்துவத்தை பெற்றிருக்கும் இவர், ஆன்மீக சொற்பொழிவாளர், ஊக்குவிப்பு பேச்சாளர், எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்துள்ளார்.
அவரது விருதுப் பயணம் இதற்கு முன்னரே தொடங்கியிருந்தது. 2023ஆம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற விழாவில் அவர் சர்வதேச சாதனை பெண் விருது பெற்றார். அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு திருச்சியில், இலக்கியம் மற்றும் சமூகச் சேவைக்கான வெற்றித் தமிழிணி விருது அவருக்கு வழங்கப்பட்டது.
குவியம் விருதுகள் 2025 சிறந்த நடிகை விருது றுத்றா அமிர்தரெத்தினம் அவர்களின் கலைப்பயணத்தில் ஒரு புதிய அங்கீகாரமாகவும், திரைப்பட உலகில் அவர் வகிக்கும் இடத்தை மேலும் உயர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

.jpeg)



.jpeg)




