வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலை
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா இன்று (9) திகதி
செவ்வாய்க்கிழமை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான வயல்
நிலத்தில் பாரம்பரிய முறையைத் தழுவியதாக நடைபெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் மற்றும்
உதவி
குருக்களான வா.சோதிலிங்ககுருக்கள் ஆகியோரினால் பூமி பூசை, கோ பூசை என்பன
செய்யப்பட்டு ஆலய வண்ணக்க தலைவர் இ.மேகராஜா, வண்ணக்க செயலாளர்
சி.கங்காதரன், வண்ணக்க பொருளாளர் ச.கோகுலகிரிஷ்ணன் ஆகியோர் ஏர்பிடித்து
வயலை உழுது ஆரம்பித்து வைத்தார்கள் .
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை
பெருநில பிரதேச மக்கள் தமது
ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தினையே செய்து வருகின்றமையுடன்,
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த
உற்சவத்தின் பின்பு அனைவரும் வயலினை உழுது நாற்றினை விதைத்து தமது தொழிலினை
செய்கின்றமையும் பாரம்பரிய முறையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.