மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுகதை பயிற்சிப் பட்டறை - 2025









கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சிப்பட்டறையானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது. 

இந்த பயிற்சிப் பட்டறைக்கு வளவாளர்களாக சிறுகதை ஆசிரியர்களும், கவிஞர்களுமான Dr. பிர்தௌஸ் (Phd, SLTAS - 01) மற்றும் டேவிட்  ( MA, Mphil , SLPS - 01) ஆகியோர் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சிப்பட்டறையை மிகவும் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர். 

 மேலும் இந்த நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர், கலைஞர் செ. பேரின்பராஜா மற்றும் எழுத்தாளர் ரூத் சந்திரிக்கா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பயிற்சிப் பட்டறையில் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 75க்கு அதிகமான மாணவர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

 இந்த நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் திருமதி வ. பற்பராசா  ஒருங்கிணைப்பு செய்திருந்ததுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளியில் nikkuran. Veeta போயிட்டு poturan
யாருக்கும் anupatheerkal