மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் முப்பெரும் விழா -2025. மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .
ஆரம்ப நிகழ்வாக பள்ளி மாணவர்களின் அணிவகுப்புடன், பேண்ட் வாத்திய முழக்கத்துடன் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமான முறையில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் , பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது அதிபர் ச .கணேசமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.
விழாவுக்கு பிரதம விருந்தினராக( வலயக்கல்வி பணிப்பாளர் -மட்டக்களப்பு கல்வி வலயம்) தி .ரவி அவர்கள் கலந்து சிறப்பித்தார் .
சிறப்பு விருந்தினர்களாக (பிரதிக்கல்வி பணிப்பாளர் -தாபனமும் முகாமையும்) க .ஹரிகரராஜ் , திருமதி சா .ரவிராஜா (பிரதிக்கல்வி பணிப்பாளர் நிர்வாகம் மட்டக்களப்பு கல்வி வலயம்)
திருமதி நி.மஹேந்திரகுமார்(பிரதிக்கல்வி பணிப்பாளர் ,கல்வி அபிவிருத்தி மட்டக்களப்பு கல்வி வலயம்)
ஆர் .ஜே .பிரபாகரன் (பிரதிக்கல்வி பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் மண்முனைவடக்கு கல்விக்கோட்டம்) .ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர் அத்தோடு திருமதி .மா .ராமேஸ்வரம் (முகாமையாளர் இலங்கை வங்கிமாமாங்க கிளை) விசேட அதிதியாக கலந்து கொண்டார்
கல்லூரியின் 65-ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட முப்பெரும் விழாவின்போது முதல் நிகழ்வாக கல்லூரி ஸ்தாபகரின் துணைவியாருக்கு அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .
பாடசாலையின் வெளியீடான கேணி-3. சிறப்பிதழ் சஞ்சிகை பங்கேற்றிருந்த அதிதிகள் அனைவருக்கும் கல்லூரி அதிபரினால் விநியோகிக்கப்பட்டது .
மேலும் கல்லூரி தேர்வுகளில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு சின்னங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டு கௌவிக்கப்பட்டார்கள்.
விழாவின்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன .