மட்டக்களப்பு சென்மேரிஸ் முன்பள்ளி பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலைய பணிப்பாளர் திருமதி .ராஜினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையிலும் ,நிலைய முகாமையாளர் திருமதி கமலினி சூரியகுமாரன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா 08.09.2025. அன்று காலை 9.30-அளவில் இடம் பெற்றது .
2வது ஆண்டு நிறைவு விழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேகா முரளிதரன் பிரதம அதிதியாகவும் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு சர்வோதய பணிப்பாளர் வள அபிவிருத்தி (கிழக்கு) E.L.A.கரீம் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இயக்குனர் குழுமத்தினர் ,முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள், சிறார்களின் பராமரிப்பாளர்கள் ஆசிரியர்கள் அத்தோடு புளியந்தீவு முன் பள்ளி சிறார்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
கடந்த 2023.11.21. அன்று சென்மேரிஸ் முன்பள்ளி மற்றும் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம் சேவை நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது , இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மிகவும் திறம் பட பராமரிப்பு நிலையம்
இயங்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .
நிலைய பணிப்பாளர் , பொறுப்பாளர் ,பராமரிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பூரண பங்களிப்போடு பராமரிப்பு நிலையம் மென் மேலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .