2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் .

 


2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சை இம்முறை  2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.