தந்தை செல்வாவின் 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது .

 


இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நாடாத்திய சிறப்பு நினைவு தின சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை (3) பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதான அறங்காவலர் எஸ்.சி.சி. இளங்கோவன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

தந்தை செல்வாவின் வாழ்க்கைத் தத்துவங்களையும் கொள்கைகளையும் இளைஞர் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இவ்வாறு நிகழ்வு நடத்துவதில் பெருமை கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் அறிமுக உரையை வழங்கி, மாணவர்களுக்கு தந்தை செல்வாவின் அரசியல் பாரம்பரியத்தை விளக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரதான உரையை உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைதீன் நிகழ்த்தினார். அவர் உரையில், தந்தை செல்வா, “ஈழத்தின் காந்தி” என அழைக்கப்படுவதற்குரிய தனது அஹிம்சை, நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். அவர் கூறினார்:

“அரசியல் என்பது அதிகாரம் பெறுவதற்கான போராட்டம் அல்ல; அது வன்முறையிலும் பழிவாங்கலிலும் அமையக் கூடாது. மாறாக, உரையாடல், கொள்கை, சமாதானம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.”

அவர் மேலும் பல்கலைக்கழகங்களை சமூக ஆராய்ச்சி மற்றும் கல்வி வாயிலாக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை முன்னிறுத்தும் மையமாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்கேற்ற பல பேராசிரியர்கள் தந்தை செல்வாவின் பாரம்பரியத்தையும், சமூக மற்றும் அரசியல் பாடங்களையும் விவரித்தனர்: