முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று ( 11 ) வெளியேறுகிறார் .

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று  ( 11 ) வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 
 
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை 4 மணியளவில் மஹிந்த ராஜபக்‌ஷ செல்லவுள்ளதாகவும் அறியமுடிகிறது. 
 
தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.