மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் இன்று

 


மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் (C. Subramania Bharati104வது நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இன்று (11) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.