கல்குடா கல்வி வலயத்துகுட்பட்ட வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் மாணவர்கள் 100% வீதம் சித்தியடைந்து வரலாற்று சாதனை














 கல்குடா கல்வி வலயத்துகுட்பட்ட வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில்  ஐந்தாம் தர புலமை பரீட்சையில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சித்திபெற்ற நிலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 100% வீதம் சித்தியடைந்துள்ள நிலையில்  பாடசாலை அதிபர் இ.விஜயகரன்  மற்றும்  கற்பித்த ஆசிரியர் திருமதி நி .கமலேஸ்வரன்
 அத்தோடு  புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவித்ததுடன்
அவர்களுக்கு பாராட்டு சின்னங்களும் வழங்கப்பட்டது.

 

  ந.குகதர்சன்