புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் 07 மாணவர்கள் சித்தி!
















கல்குடாக்கல்வி வலயத்தின்,
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மன்தனாவெளி,
காட்டுமுறிவு , கதிரவெளி, காயாங்கேணி, கிரிமிச்சை, மாங்கேணி, மருதங்கேணிக்குளம்,
பால்ச்சேனை, பனிச்சங்கேணி,
புனானை, ஊரியங்கட்டு,
வட்டவான்,வாகரை
ஆகிய இடங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள்  அதிகமாக உள்ளனர். இப்பிரதேசங்களில் சுமார்
 20 பாடசாலைகளுக்கு மேல் உள்ளன. அதில் இம்முறை  
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மொத்தமாக ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.


மட்/ககு/பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம்
ஸ்ரீகாந்த்ராஜா ஜோஜிதன் (147 புள்ளிகள்) ,
தேவசின்னம் தெபோரா ( 133 புள்ளிகள்),
சசிகுமார் பர்ணிஸ்கா (135 புள்ளிகள் )

மட்/ககு/வம்மிவட்டவான் வித்யாலயம்   

சத்தியசீலன் சிதுஸ்ரிக்கா (135 புள்ளிகள்)
பரமசிவன் துஜன் (134 புள்ளிகள்)

மட்/ககு/மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

சதீஷ் அஜய் (145புள்ளிகள் )

மட்/ககு/கண்டலடி பாடசாலை
 திலீபன் ஷக்சபி   (140புள்ளிகள்)

அதிபர்கள்
சிவலிங்கம் இந்திரன், த. சதானந்தகுமார் , ரி.உதயகுமார், சண்முகம் கருணைராஜா  என்பவரின் மேற்பார்வையின் கீழ்
  சந்திரன் நிலாந்தினி, இராஜேந்திரன் தஸ்வினி ,ஏ.சிவாகரன், பி.நிஷாலினி , வர்ணகுலசிங்கம் வேதாகரன் ஆகிய ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கற்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை  மொத்தமாக
ஏழு மாணவர்கள் சித்தி அடைந்து பிரதேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.