1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.
159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (03) பொலிஸ் களப் படை தலைமையகத்தில் சிறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு போக்குவரத்து பிரிவினர் சிறப்பு போக்குவரத்து திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இப் போக்குவரத்து திட்டத்தின்படி, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தியிலிருந்த திம்பிரிகஸாய சந்தி வரையிலான ஹேவ்லொக் வீதியில் பின்வருமாறு வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள வெளிச்செல்லும் பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஹேவ்லொக் வீதியிலுள்ள பொன்சேகா வீதி சந்திக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படும்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸாய சந்திக்கிடையில் பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் கன்டெய்னர், லொறி மற்றும் டிப்பர் போன்ற கனரக வானகப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.