ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவர் இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.