மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூதூர் கிளிவெட்டி பகுதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

 


திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் நேற்று புதன்கிழமை (27) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது உந்துருளி மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.