வளத்தாப்பிட்டி மாணவர்களுக்கு "ஒஸ்கார்" அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு.
















 



அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.

"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் ( ராஜன்) வழிநடத்தலில்,  பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தியின் ஒழுங்கமைப்பில், "ஒஸ்கார்" அமைப்பின் போசகர் பொறியியலாளர் வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு , வளத்தாப்பிட்டி அ.தி.க.பாடசாலையில்  ( 19)  புதன்கிழமை  அதிபர் ஆர் .தர்ஷானந்த் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டுக்குழுத் தலைவர், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

சிறப்பதிதியாக ஒஸ்கார் பிரதிநிதி ஆசிரியர் ஆர்.இரத்தினகுமார்  கலந்துசிறப்பித்தார்.

நிகழ்வில் 64 மாணவர்களுக்கு பாடசாலை பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

"ஒஸ்கார்"  அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல  சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் கடந்த 15 வருடங்களாக செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதத்தில் இதுவரை திராய்க்கேணி, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி ஆகிய பாடசாலைகளில் உதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் வீரச்சோலை பாடசாலைக்கும் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தெரிவித்தார்.
இவ் வருடம் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் பெருமளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகஅவர் மேலும் தெரிவித்தார்.
 
 ( காரைதீவு  சகா)