யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கும் பிரதேசமாக உள்ள மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் லில்லி திரு அறக்கட்டளை நிலையத்தினால் இன்று (26) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக லண்டன் லில்லி திரு அறக்கட்டளை நிலையத்தின் நிதி உதவியில் வழங்கப்பட்ட மேற்படி உதவி ஊடாக திகிலிவெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 216 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வாழைச்சேனை, கோரளைப்பற்று தவிசாளர் சு.சுதாகரன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், திகிலிவெட்டை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவராசா, பாடசாலை அதிபர் ச.அன்பழகன், சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தர்சன், பொருளாளர், கு.சுபோஜன், சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் அ.ஜெயராஜ் மற்றும் செங்கலடி வர்த்தகரும் சமூக சேவகருமான உமாசேகரன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





