மண்முனை தென்னிருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பா. உ .கந்தசாமி பிரபு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.












 வரதன்

 

புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக 58 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 அதன் ஒரு கட்டமாக  கிராமங்களில் உள்ள மக்களை தேர்வு செய்து அவர்களின் கிராமிய வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பு முகமாக

 மண்முனை தென்னிருவில் பற்றி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மண்முனை தென்  எருவில் பற்று பிரதேச செயலாளர் உ
 உதய ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது

 இதன் போது மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்

 களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் பிரபாகரன் மற்றும் பதில் பிரதேச செயலாளர் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பயனாளிகள் பொதுமக்கள்  நிகழ்வில் கலந்து கொண்டனர்