இலங்கையில் காட்டு யானைகளால் காவு கொள்ளப்படும் உயிர்கள் .இன்றைய தினமும் மூவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

 


இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை மாவட்டம், செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் மாவட்டம், நவகத்தேகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பகுதியில் காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரியை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.