சமகாலத்தில் பேசுபொருளாக  இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது  தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .
ஆனால்
 அதற்கு முன்பு முன்மொழியப்பட்ட கல்முனை நாவிதன்வெளி வாழ் தமிழ் முஸ்லிம் 
மக்களின் அபிலாஷையான கல்முனை மத்தி  கல்வி வலயத்தை முதலில் தோற்றுவிக்க 
வேண்டும்.
இவ்வாறு 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி செயலாளரும், கல்முனைத்தொகுதி 
அமைப்பாளருமான சட்டத்தரணி அருள்.நிதான்சன் தெரிவித்தார் .
கல்முனை ஊடக மையத்தில் இன்று (28) வியாழக்கிழமை நடைபெற்ற அவசர ஊடகச் சந்திப்பில் பேசுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அங்கே அவர் மேலும் தெரிவிக்கையில்..
கல்வி வளங்களை பகிர்வதில் ஏற்படுகின்ற பாரபட்சம் மற்றும்
கல்வி
 நிர்வாக சேவைகளில்  இருக்கின்ற நெருக்கடிகளையும் சவால்களையும் குறைத்து 
நிருவாகத்தை இலகுவாக்குவதற்கும் மாணவர்களுக்கும் கல்வி சமூகத்துக்கும் 
தேவையான பாரபட்சமற்ற கல்வியை நீதியாக வழங்கும் பொருட்டும் கல்முனை மத்தி 
கல்வி வலயத்தை
தனியாக பிரிப்பது என்பது எமது பல தசாப்த கால கோரிக்கையாகும்.
எனவே
 கல்முனை வலய தமிழ் பாடசாலைகள் மற்றும் நாவிதன்வெளிக் கோட்ட தமிழ் முஸ்லிம்
 பாடசாலைகளை இணைத்து 48 பாடசாலைகளுடன் தனியான கல்முனை மத்திவலயத்தை 
ஸ்தாபிக்க இந்த அரசு முன்வர வேண்டும். என்றார்.
 (வி.ரி.சகாதேவராஜா)
 


 
 




 
 
 
 
.jpeg) 
