மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய ஐந்தாம் நாள் இன்றைய சதுர்த்தி தினத்தன்று சுண்ணம் இடித்தல் நிகழ்வு இடம்பெற்று தீர்த்தோற்சவம் திருவிழா பக்த அடியார்கள் சூழ நிறைவு பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ( 23 ) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
ஆலயத்தில் இடம் பெறும் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வேத பாராயணங்கள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன், அரசடிப்பிள்ளையாருக்கு பக்தி பூர்வமாக கொடியேற்றம் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் இடம்பெறும் இப் பெருவிழாவில் 26 ம் திகதி நான்காம் நாளாகிய தேரோட்டத் திருவிழா பக்தர்கள் புடை சூழ வெகுபிமர்சையாக இடம் பெற்று 27ம் திகதி ஆவணி சதுரச்சியில் தீர்த்தோற்சவம் பக்தர்கள் புடை சூழ பகிபவர்சையாக நடைபெற்றது
ஆலய உற்சவங்கள் யாவும் ஆலயம் பிரதம குரு ஹரிகர சர்மா, கணேச லோகநாத குருக்கள் தலையிலான குழுவினரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)



.jpeg)








