வடகிழக்கு மாகாணத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடம்--நாட்டுக்கோழி வளர்ப்பை மே;ம்படுத்த பாரிய நடவடிக்கை
மக்களிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தும் செயற்திட்டங்களை காவேரி கலா மன்றம் மேற்கொண்டு வருகின்றது.வடகிழக்கு மாகாணங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாமித்தையும் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தையும் வவுணியா மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதாக காவேரி கலா மன்ற மட்டக்களப்பு மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் திருமதி தவச்செல்வம் லெபோரா தெரிவத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளப்பாளர்கிடையேயான் கோழிக்கண்காட்சியும் கோழி வளர்ப்hர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான கோழிகள் பரிசாக வழங்கும் நிகழ்வும் சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்றது செங்கலடி பிரதேச செயலக சிறு கைத்தொழில் உத்தியோகத்தர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
நாட்டுக்கோழி வளர்ப்பாளர்களினால் வளர்க்கப்படும் கோழிகள் எங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உடன் வெற்றி பெற்றவர்களுக்கான சேவல் மற்றும் பேட்டுக் கோழிகள் பரிசாக வழங்கப்பட்டன.
பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பின் மூலம் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும் பாரம்பரிய நாட்டுக்கோழிகளை வளர்ப்பதன் மூலமாக செலவு குறைந்த ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்து அதிகமான முட்டை மட்டும் எழுச்சி வாய்களை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மக்கள் மத்தியில் காவேரி கலாமன்றம் கடந்த பல பிரசாத் காலமாக அறிமுகப்படுத்தி பலப்படுத்தி வருகின்றது
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று மக்கள் சபை சங்கங்கள் இணைந்து தங்களுடைய அங்கத்தவர்களுக்கான நாட்டுக்கோழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக சிறிய அளவிலேயே தமது வீடுகள் தோறும் நாட்டுக்கோழிகளை தமது பண்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக வளர்த்து வருவதன் மூலம் ஆரோக்கியமான ஊட்டச்சத்தை பெறுவதும் அதே நேரத்தில் சிறிய குடும்ப வருமானத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் காவேரி கலா மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயித்திட்ட இணப்பாளர் தவச்செல்வன் லெபோரா மேலும் தெரிவித்தார்
ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





