கல்முனை
நெற் ஊடக வலையமைப்பின் முப்பெரும் விழா தினகரன் - தினகரன் வாரமஞ்சரி-
ஒருவன் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரும், கல்முனை நெற் இயக்குனர்
சபை உறுப்பினருமான க.குணராசா தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக
நடைபெற்றது.
கல்முனை வாடி வீட்டு வீதியில், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், கல்முனை நெற்
இயக்குனர் சபை உறுப்பினருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி. சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில்,
கல்முனை நெற் அலுவலகத் திறப்பு விழா ,கல்முனை ஊடக மைய அங்குரார்ப்பணம்
மற்றும் கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய அங்குரார்ப்பணம் என்பன இடம்பெற்றன.
விழாவில் நட்சத்திர அதிதிகளாக
வே.ஜெகதீசன்
(மேலதிக செயலாளர், போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு),
சிவ.ஜெகராஜன் ( மேலதிக அரசாங்க அதிபர் & மாவட்ட சதுர்த்தி பணிப்பாளர்-
அம்பாறை), த.கஜேந்திரன் ( பிரதேச செயலாளர் -
திருக்கோவில்),ரி.ஜே.அதிசயராஜ் ( பிரதேச செயலாளர் - கல்முனை வடக்கு)
,எஸ்.பார்த்தீபன்
( பணிப்பாளர் -கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்)
,மருத்துவர்.கு.சுகுணன் ( பணிப்பாளர் - கல்முனை ஆதார வைத்தியசாலை),
மூ.கோபாலரெத்தினம்( ஓய்வு நிலை சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரி )
ச.நவநீதன் ( ஓய்வு நிலை கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் ) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்முனை
நெற் ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர், கட்டாரில் வாழும் கல்முனை பாண்டிருப்பைச்
சேர்ந்த புவிநேசராசா கேதீஸ்ஸின் துணைவியார் திருமதி கேதீஸ் ரத்னபிரியா
மற்றும் மகளிரணி தலைவி இளம் எழுத்தாளர் திருமதி ஜெனிட்டா மோகன் உள்ளிட்ட
மகளிரும் கலந்து கொண்டனர்.
விழாவில்
இயக்குனர் சபை உறுப்பினர் பிரபல எழுத்தாளர் வித்தகர் கலாபூசணம் மறைந்த
வே.சண்முகநாதன் (முகில் வண்ணன்) அவர்கள் எழுதிய மற்றும் வாசித்த நூல்
தொகுதியை அவரது மகளான திருமதி ரோகிணி தவராஜா ( லண்டன்) அங்கு இயக்குனர்
சபையிடம் வழங்கி வைத்தார்.
கல்முனை கலாச்சார உத்தியோகத்தராக சேவையாற்றிய த. பிரபாகரன் ஊடகவலையமைப்பால் பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டப்பட்டார்.
இயக்குனர்
சபை உறுப்பினரான இளம் கவிஞர் எஸ்.ரகுபரன் வாழ்த்து மடலை யாத்து
வாசித்ததும், சிரேஸ்டஉறுப்பினர் கா. சந்திரலிங்கம் அதைக் கையளித்தார்.
ஆசிரிய ஆலோசகரும் இயக்குனர் சபை உறுப்பினருமான
கா.சாந்தகுமார் நன்றியுரையாற்றினார்.
ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கல்முனை நெற்
இயக்குனர் சபை உறுப்பினருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி. சகாதேவராஜா நிகழ்வை தொகுத்தளித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)
























