கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒழுங்கு படுத்துதலில் ஏறாவூர் மட்/மம/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர ‘பாடசாலை மாணவர்களிடேயே திரவ பால் நுகர்வினை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு’











தூய பசும்பால் நுகர்வினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடேயே தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண  கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின்  ஏறாவூர் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் PSDG திட்டத்தின் கீழ் 26.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று ஏறாவூர் மட்/மம/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில்S.M நவாஸ்தீன் அதிபரின்    
பங்களிப்புடன் இன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் நுகர்வு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றதுடன் பாடசாலை மாணவர்களிடேயே போட்டி நிகழ்வுகளும் வைக்கப்பட்டு அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை அரச கால்நடை வைத்திய அலுவலக வைத்திய அதிகாரி Dr. R. சுபாசுகி மற்றும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.B.M றமீஸ் மற்றும் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின்  அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் வெற்றிகரமாக இந் நிகழ்வு பாடசாலை மாணவர்களிடேயே நடத்தப்பட்டது. இதனடிப்படையில் 500 மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி அவர்கள் மத்தியில் பசும்பால் நுகர்வினை ஊக்குவித்தல் தொடர்பாக கருத்தரங்கும் இடம்பெற்றது.