வரதட்சனை காரணமாக தனது குழந்தையுடன் தாய் ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந் சஞ்சு பிஷ்னோய் திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (3 வயது) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉ ளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை உந்துருளியில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீ வைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தைக் கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர்பொலிஸ் நிலையத்தில் கணவர், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக முறைப்பாடு செய்துள்ளனர்.





