மட்டக்களப்பு செங்கலடி தளவாய் வட்டாரத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக சிவபதி கல்வி நம்பிக்கை நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படும் மேற்படி உதவி திட்டத்தின் ஊடாக முதல் கட்டமாக ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுகு மாதந்தம் பதினொராயிரம் ரூபாய் (11,000/-) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான முதலாவது உதவி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செங்கலடி ரமேஸ்புரம் சேவகம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ் உதவித் திட்டம் ஊடாக குறித்த மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி நிறைவடையும் வரை அவர்களுக்கான மாதாந்த நிதி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதோடு, குறித்த மாணவர்களுக்கான மடிக்கணனிகள் உள்ளிட்ட பல மேலதிக உதவிகளும் வழங்கிவைக்கப்பட உள்ளன.
ஊடகவியலாளரும், பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றை நிகழ்வில்
சேவகம் நிறுவனத்தின் செயலாளர் தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் ஜெயராஜ், செங்கலடி ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தலைவர் க.மகேந்திரன்,செங்கலடி வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .