மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச மட்ட இலக்கிய விழா போட்டிகள் -2025















கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய இலக்கிய விழாவினை முன்னிட்டு இடம்பெறும் பிரதேச மட்ட இலக்கிய விழாவுக்கான  தெரிவு போட்டிகள் இன்றைய தினம் (26.08.2025) பிரதேச செயலாளர் திரு உ.உதயஸ்ரீதர்  அவர்களின் ஆலோசனையின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூகத்தில் காணப்படும் இலக்கிய கலையினை மேம்படுத்தல் மற்றும் மனப்பாங்கினை உருவாக்கல், பிரதேச இலக்கியவாதிகள் மற்றும் புதிய தலைமுறையினரிடையே ஆக்கத்திறனை மேம்படுத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு நடைபெற்ற இந்த தெரிவு போட்டிகளில் பாடசாலை மற்றும் கலைக்கழகங்களினை சேர்ந்த மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

இதன்போது சிறுவர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளின் கீழ்  கதை சொல்லல், பாடல் நயத்தல், கவிதை ஆக்கம் போன்ற தெரிவு போட்டிகள் இடம்பெற்றது.

இந்த பிரதேச மட்ட தெரிவு போட்டிகளை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒழுங்குச செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.