மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் மங்களகம ஆயுர்வேத மருத்துவ மருந்தகமே இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதன்படி குறித்த மருந்தகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று ( 26 ) நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆளுநரின் செயளாலர் ஜே.எஸ். அருள் ராஜ், மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள பணிப்பாளர் டொக்டர் நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.





