ஐபோன் 17 சீரிஸின் அறிமுகம் செப்டம்பரில் 9-ம் திகதி நடை பெற உள்ளது

 


ஐபோன் 17 சீரிஸின் அறிமுகம் செப்டம்பரில் நடக்கும் என்று கண்டிப்பாக தெரியும் ஆனால் சரியான தேதி தான் தெரியவில்லை என்று.. இனி நாம் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹாஹார்ட்வேர் வெளியீட்டு நிகழ்வின் தேதியை அறிவித்துள்ளது. "ஆவ் ட்ராப்பிங்" (Awe Dropping) என்கிற பெயரின் கீழ் நடக்கவுள்ள இந்த ஆப்பிள் நிகழ்வு 2025 செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், சரியாக செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் தொடங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களாக ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் அறிமுகமமாகும். கூடவே பல்வேறு வகையான ஆப்பிள் தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக ஆப்பிளின் செப்டம்பர் 9 நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? இதோ லிஸ்ட்: 1. ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series): கடந்த ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் நான்கு மாடல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்; ஆனால் சில மாற்றங்கள் இருக்கும். இம்முறை ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக புதிய ஐபோன் 17 ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது இதுவரை வெளியான எந்தவொரு ஐபோன் மாடலை விடவும் மிக மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.