இந்தியாவின்
தில்லியில் அண்மையில் நடைபெற்ற ‘அனைத்துலக சுற்றுலா மாநாடு மற்றும் பயண
விருதுகள்’ (International Tourism Conclave and Travel Awards)
நிகழ்ச்சியில், இலங்கை விமான சேவை (SriLankan Airlines) தெற்காசியாவின்
சிறந்த விமான சேவைக்கான மதிப்புமிக்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
தெற்காசியாவையும்
உலகையும் இணைக்கும் வகையில், இலங்கை விமான சேவைக்கே உரித்தான தனித்துவமான
விருந்தோம்பல் மற்றும் பயணிகளுக்கு உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்காக
இந்த விருது கிடைத்துள்ளது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக்
கொண்ட நடுவர் குழு இந்த விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களைத்
தீர்மானித்தது. இந்த வெற்றி, தெற்காசியாவில் மிகவும் பிரபலமான விமான
சேவையாக இலங்கை விமான சேவையின் அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.