செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் சிறிய பகுதி ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது .

 



அண்மையில் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் ஒரு சிறிய பகுதியை நாளை மறுதினம் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு பிரபல ஏல நிறுவனமொன்று முன்வந்துள்ளது.
2 முதல் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதனை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்த பூமியில் பூமிக்கு சொந்தமானது மாத்திரமன்றி வேற்று கிரகங்களுக்கு சொந்தமான திண்மப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்தின் பாறைப் பகுதி என்பதும் அவ்வாறான ஒன்றாகும். இது பூமியில் அடையாளம் காணப்படும் மிக விலை உயர்ந்தவொரு பாறைப் பகுதியாகும். செவ்வாய் கிரகத்திலிருந்து இந்த பாறை பகுதி பூமியை நோக்கி வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் மீது மற்றுமொரு கிரகம் போன்ற ஒன்று மோதுவதால் ஏற்படும் வெடிப்பு காரணமாக வெளியாகும் கோளின் துகள்கள் விண்வெளியில் பல மில்லியன் மைல்கள் தூரம் கடந்து இவ்வாறு பூமியில் வந்து விழுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வாறு பூமியை வந்தடையும் பல பாறைகள் துண்டுகள் தீப்பிடித்து அழிவடைகின்றன.
அளவில் பெரிய மிகவும் குறைந்த அளவிலான பாகங்கள் மாத்திரம் பூமியில் வந்து விழுகின்றன. அவ்வாறு பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய பாறைப் பகுதி NWA 16,788 என்ற ஒன்றாகும். இதன் எடை 54 இறாத்தல்கள், அதாவது 25 கிலோகிராம். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இந்த பாறைப் பகுதி. கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது