அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் (04) திகதி நாடளாவிய நீதியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் உள்ள 311 அரச நிறுவனங்களில் சிரமதானம் மற்றும் அலுவலக மீள் புனரமைப்பு பணிகள் "ஊழிய செயற்பாடு" எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
அதன் அடிப்படையில்
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்ழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்திலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்ழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் கே.அருள்சிவம் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக பல்கலைக்கழக கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் செயற்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்ததுடன், நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப்.ரிப்கா மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பிரசந்தி விக்டர் நிக்ஸன் ஆகியோரும் கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் செயற்பாட்டினை ஆரம்பித்துவைத்தனர்.
இந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என் 50 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இலங்கை பூராகவும் உள்ள தொழிற்கல்வி வழங்குகின்ற 311 நிறுவனங்களில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா செய்ற்றிட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும்
இந்த நாட்டை கடந்த அரசாங்கங்கள் சமூக, அரசியல் ரீதியாக சீரளித்த நிலையிலேயே நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள். செழிப்பானதொரு நாடாக இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மனங்களின் ஏற்படும் மாற்றத்தின் ஊடாக இந்த நாட்டை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். அந்த வகையிலேயே இந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உதித்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது என இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அந்தசாமி பிரபு தனது உரையில் தெரிவித்தார்.
குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமுலை மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் உள்ள VTA நிலையங்களில் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.