இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கினைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்.

 

 

 


 





























 இளைஞர் விவகார விளையாட்டுத்துறை  அமைச்சின் ஒருங்கினைப்பில்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது முன்னால் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின்  தலைவர் ஜே.சஜிவ் தலைமையில் புனித செபஸ்த்தியார் ஆலய மண்டபத்தில்  (30) இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து சிறப்பித்தார்.

2025/ 2026 ஆம் ஆண்டுக்கான  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவராக லோஜிதன்தெரிவு செய்யப்பட்டார்.

இவ் உறுப்பினர்களினால் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான அபிவிருத்தி பணிகளையும் சமூக சேவைகளையும் மேற்கொள்ளவுள்ளர்.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இளைஞர் அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர், மட்டக்களப்பு உதவி பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.