பெரு நாட்டில் பேருந்து
ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலியாகினர். மேலும், 48
பேர் காயமடைந்துள்ளதாக, அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின், லிமாவில்
இருந்து, அமேசான் மாகாணத்துக்குச் சென்ற பேருந்து ஒன்று, கவிழ்ந்து
பள்ளத்திற்குள் பாய்ந்தது.
இதில் பேருந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்ததுடன், 48 பேர் காயமடைந்தனர்.
அவர்களைத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்து விபத்து தொடர்பில் அந்த நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.