நாடளாவியரீதியில் 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்றுள்ளார்கள் .

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள 1911 என் இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். 

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,

தெற்கு 75.64%

மேல் 74.47%

கிழக்கு 74.26%

மத்திய 73.91%

சப்ரகமுவ 73.47%

ஊவா 73.14%

வடமேல் 71.47%

வட மத்திய 70.24%

வடக்கு 69.86%