மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ் கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் வாழைச்சேனை இந்து கல்லூரி மற்றும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு .

 


 

































மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ்( Rotary  Heritage)  கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில்  இன்றைய தினம் (2025.06.30)  மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு 10துவிச்சக்கர வண்டிகள் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கி வைக்கப்பட்டது, துவிச்சக்கர வண்டி விநியோக நிகழ்வில் உதவி கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் . மேலும் கடந்த 2025.06.27-ம் திகதியன்று    மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ்  கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில்   மட்டக்களப்பு இந்துக்கல்லூரில்  பயிலும்  தெரிவு செய்யப்பட்ட   05மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டி  வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய தமிழ் நாடு சேலம் டிஸ்ட்ரிக் 2982 ரோட்டரி கழகம் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்திருந்தது .
வடக்கு கிழக்கு உட்பட வட மத்திய மாகாணங்களை சேர்ந்த பாடசாலை  மாணவர்களுக்கு 2௦௦௦  துவிச்சக்கரவண்டிகள்  விநியோகம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முதல் கட்டமாக 45.துவிச்சக்கரவண்டிகள்    மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது , கடந்த 2025.05.19.அன்று மட்டக்களப்பில் இயங்கும் மூன்று ரோட்டரி கழக தலைவர்களும் இணைந்து  45.துவிச்சக்கரவண்டிகள்  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு   மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைத்தனர்  ,துவிச்சக்கரவண்டி விநியோக நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக  மாவட்ட ஆளுநர் சுசேன  ரணதுங்க  கலந்து சிறப்பித்தார்.


FREELANCER