வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மாதிரி சந்தைக்கண்காட்சி - பிரதேச சபை உறுப்பினர்கள் பங்கேற்பு










மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் இயங்கும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இன்று (18) மாதிரி சந்தைக்கண்காட்சி நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஷல்மானுல் ஹரீஸ் அவர்களின் ஆலோசனையில் தரம் 3 மாணவர்காலின் பெற்றோர்களின் பங்களிப்பில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் இக்கண்காட்சி இடம்பெற்றது.

இதில் தரம் 3 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  

மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பமளித்து மகிச்சியுடன் பாடசாலைக்கு வருவதற்குரிய சந்தர்ப்பஙகளை அமைத்துக்கொடுப்பது அதிபர்களின் கடமையாகும்.

அந்த வகையில், பிள்ளை நேயப்பாடசாலையான வை.அஹமத் வித்தியாலயத்தில் குறித்த மாணவர் சந்தை இனறு ஏற்படுத்தப்பட்டது.

சமூகமும் பிள்ளைகளும் பெற்றோரும் எவ்வளவு தூரம் பாடசாலைக்கு விரும்பி வருகின்றார்களோ அவ்வளவு தூரம் பாடசாலை முன்னேறும் எனும் திட்டத்தின் அடிப்படையில் கல்வியமைச்சு இதனை வலியுறுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே இணைப்பாட விதாணத்தில் இவ்வாறான தொடர் செயற்பாடுகள் எமது வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.  

இக்கண்காட்சியின் சந்தையொன்றில் விற்பனை செய்யக்கூடிய அனைத்து விதமான பொருட்கள் விலைப்பட்டியலுடன் காட்சிப்படுத்தப்பட்டதுடன், முறையான வர்த்தக நடைமுறைகளை முன்னெடுத்தல், வாடிக்கையாளர்களுடனான சிறந்த தொடர்பாடலைப் பேணுதல் போன்ற விடயங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுவதாக அதிபர் தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஷ்ல்மானுல் ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.அனஸ், எம்.எம்.எம்.றிஸ்மி, ஏ.எல்.சமீம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையப்பணிப்பாளர் எஸ்.எச்.புர்ஹானுதீன், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.எம்.நியாஸ், ஆயிஷா பாலிகா மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன், ஹைறாத் வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.றமீஸ், ஓட்டமாவடி எக்ஸலெண்ட் சிராஜ் கல்லூரி பணிப்பாளரும் வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் றஹீஸ் நளீமி, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் மெளலவி முஹம்மது ஷப்ரி ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.  

ந.குகதர்சன்