யாழ்ப்பாணம் - செம்மணி மனித
புதைக்குழி விவகாரத்தில் நீதிகோரி அணையா தீபம் ஏற்றி, போராட்டமொன்றை
நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செம்மணி மண்ணில் புதையுண்டுபோன
உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக 'அணையா தீபம்" என்ற பெயரில் குறித்த
போராட்டமானது அணையா தீபம் ஏற்றி எதிர்வரும் 23 ஆம், 24 ஆம், 25 ஆம்
திகதிகளில் செம்மணி வளைவு பகுதிகளில் அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு
போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.