கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அடியார்களின் புடைசூழ நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் 02ஆம் திகதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் கடந்த 26ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி இன்று திங்கட்கிழமை தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்று திங்கட்கிழமை (30) தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை வரையில் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்று காலை தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பல பாகங்களிலுமிருந்து அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கும்பாபிஷேக பிரதம குருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், ஆலய குருக்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வினை தொடர்ந்து பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கெடுத்து வருகின்றனர்.
02ஆம் திகதி புதன்கிழமை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
ந.குகதர்சன்