அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கப்பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்

 


அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கப்பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 
 
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், இதற்காக நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 
 
அவ்வாறு கிடைக்கப் பெறும் நிதியே நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.